Friday, 23 December 2011

Posted 19 December 2011 - 10:48 AM

பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே வேறுபாடுகள் காலம்காலமாக இருந்து வருகின்றன. இத்தகைய மாறுபட்ட விருப்பங்களை - பெண்ணை விரும்பும் பெண், ஆணை விரும்பும் ஆண், இருபால் உறவை விரும்புவோர், திருநங்கைகள் (lesbian, gay, bisexual, and transgender) என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். இதனைப் பொதுவாக LGBT என்று அழைக்கின்றனர்.
Posted Image
இத்தகைய மாறுபட்ட பாலியல் விருப்பம் இயல்பானதுதான், காலம்காலமாக இருப்பதுதான் என்பது அறிவியல் ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இன்னமும் ஒதுக்குதலும், மனித உரிமை மீறல்களும் தொடரவே செய்கின்றன. இந்த அநீதியை எதிர்த்து இந்திய அளவில் துணிச்சலாக குரல் கொடுத்த ஒரே அரசியல் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்தான். 

மூன்றாண்டுகளுக்கு முன்பு அவரது கருத்து இந்தியாவில் பலராலும் தூற்றப்பட்டது, எதிர்க்கப்பட்டது. இன்று வரலாறு தலைகீழாகி - ஐக்கிய நாடுகள் அவையே அதனை வழிமொழிந்துள்ளது. அதுகுறித்து பார்ப்போம்:

2008 - ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என அறிவிக்க கோரிக்கை.

ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 377 ஆம் பிரிவை நீக்க வேண்டும் என்று நடுவண் முன்னால் அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் அவர் இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது பிரதமருக்கு கடிதம் எழுதினார். (இங்கே காண்க: Legalise homosexuality: Ramadoss) . ஆங்கிலேய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரிவு 377 இங்கிலாந்திலேயே காலாவதியான பின்னரும் இந்தியாவில் நீடிக்கும் கொடுமையை அவர் எதிர்த்தார், இதற்காக அவர் பலராலும் தூற்றப்பட்டார்.

Posted Image
'ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம்' என்கிற கருத்தை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தலைமையிலான இந்திய நலவாழவு அமைச்சகம் எதிர்த்தபோது, இந்திய உள்துறை அமைச்சகம் அதனை ஆதரித்து.

2009 - உள்துறை அமைச்சகத்தின் இரட்டை நிலையும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்.

தில்லி உயர்நீதி மன்றத்தில் ஓரினச்சேர்க்கையை குற்றம் என அறிவிக்கும் இ.த.ச. 377 ஆம் பிரிவுக்கு எதிரான வழக்கில்இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சகம் இப்பரிவை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரித்தது. ஆனால், உள்துறை அமைச்சகம் இ.த.ச. 377 ஆம் பிரிவை நீக்க எதிர்ப்பு தெரிவித்தது. கடைசியில் தில்லி உயர்நீதிமன்றம் 'ஓரினச்சேர்க்கை குற்றமற்றது' என 2009 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

Posted Image
இந்த தீர்ப்பை எதிர்த்து 'ஓரினச்சேர்க்கையை எதிர்க்கும்' சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடிய போது - இந்திய அரசாங்கம் இந்த சிக்கலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்தது.(இங்கே காண்க: Government Defers Decision on 377 to Supreme Court) இந்திய அரசின் நலவாழ்வு, உள்துறை, சட்டம் ஆகிய மூன்று அமைச்சரகங்கள் ஒன்று கூடி, தில்லி உயர்நீதிமன்றத்தின் 'ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல' என்கிற தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பது இல்லை என முடிவெடுத்தது.

Posted Image
கடைசியில் - அன்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் முன்வைத்த கருத்துதான் வெற்றியடைந்துள்ளது.

2011 ஐ.நா.அவையின் அதிரடி.

Posted Image
இப்போது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையம் பாலியல் விருப்பத்தின் காரணமாக (அதாவது ஒரினச்சேர்க்கை உட்பட) ஒருவரது மனித உரிமை பறிக்கப்படக்கூடாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (இங்கே காண்க:Resolution adopted by the Human Rights Council).

ஓரினச்சேர்க்கை தொடர்பான ஆவணங்கள்:

1. The Right that Dares to Speak its Name
2. UN Human Rights Council - Discriminatory laws and practices and acts of violence against individuals based on their sexual orientation and gender identity
3. Yogyakarta Principles on the Application of International Human Rights Law in relation to Sexual Orientation and Gender Identity

http://arulgreen.blogspot.com/ 

Monday, 19 December 2011

திருநங்கை கல்கி திரைப்பட நாயகியாக புது அவதாரம் எடுத்துள்ளார்.

Now Playing Don 2 Trailers in 3D. Catch It All on YouTube!
Kalki
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
சகோதரி என்ற பவுண்டேஷனை நடத்தி வருபவர் திருநங்கை கல்கி. எம்.ஏ படித்தவரான இவர் திருநங்கைகளுக்கான திருமண இணையதளத்தையும் நடத்தி வருபவர். தமிழகத்தின் பிரபலமான திருநங்கைளில் இவரும் ஒருவர். திருநங்கைகள் நலனுக்காக பாடுபட்டு வருபவர்.

இந்த நிலையில் தற்போது கல்கி திரைப்பட நாயகியாகியுள்ளார். நர்த்தகி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் கல்கி. திருநங்கைகள் குறித்த படம் இது. திருநங்கைகளை நல்ல வெளிச்சத்தில் காட்டும் கதை என்பதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறுகிறார் கல்கவி.

புன்னகைப் பூ கீதா இப்படத்தை தயாரிக்கிறார். விஜயபத்மா இயக்குகிறார். திருநங்கைகளின் வாழ்க்கையை அழகுற சித்திரித்த முதல் படம் என்ற பெருமை இப்படத்திற்குக் கிடைக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.

நிலத்தை எழுதித் தரக் கூறி அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கைது

Huge Selection of Decorative Paints, Visit official Site Now!
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
சென்னை: நிலத்தை எழுதித் தர மறுத்த அரவாணியை, அடித்து, உதைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.

சென்னை, பள்ளிக்கரணை பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அமுல்ராஜ் என்ற அமுதா (34) அரவாணியான இவர், ரியல் எஸ்டேட் புரோக்கர். கடந்த 24ம் தேதி கடைக்கு சென்ற அமுதா பின்னர் வீடு திரும்பவில்லை.

மறுநாள் அதே பகுதியில் காயங்களுடன் கிடந்த அமுதாவை மீட்ட அவரது தாய் பிலோமினா மேடவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அமுதாவை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்துள்ள அமுதாவிற்கு, தலையில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிந்து விசாரித்தார். அதில், அரவாணி அமுதாவை 5 பேர் கொண்ட கும்பல் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, அடித்து உதைத்தது தெரிந்தது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பிலோமினா, அப்பகுதியில் வாங்கிய நிலத்தை அபகரிக்க நினைத்த 5 பேர் கொண்ட கும்பல், அமுதாவை மிரட்டி உள்ளது. அதற்கு அமுதா மறுக்கவே, அவரை பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியுள்ளதாக பிலோமினா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஸ்டீபன் (24), சுரேஷ் (21), அசோக்குமார் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

ச்ஐவிக்கு முதல் எதிரி மனிதனின் உடம்பு தான்!

லண்டன் : மனிதர்கள் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும் தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே பிரதானம். மனிதரின் உடலில் பரவும் எச்.ஐ.வி. (ஹியூமன் இம்யுனோ டெபீஷியன்சி வைரஸ்) கிருமி, ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது. உடலில் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைகிறது. இதுவே எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது எய்ட்ஸ் எனப்படுகிறது. 

ரத்தம் செலுத்துதல், ஸ்டெரிலைஸ் செய்யாத ஊசி பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பரவும் என்றாலும் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முக்கிய காரணம். உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் அதிக உயிர் பலி வாங்கும் தொற்று நோயாக எய்ட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பிரசாரம் நடக்கிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி (இன்று) உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடக்கின்றன. எச்.ஐ.வி. பாதிப்பு பற்றி இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலை, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. உடலில் எச்ஐவி கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்தது. இதுபற்றி தலைமை ஆராய்ச்சியாளர் மிகேல் வெப் கூறியதாவது:

எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், எச்ஐவியின் குணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்வது அவசியம். லூக்கோசைட்ஸ் எனப்படும் ரத்த வெள்ளை அணுக்கள்தான் எதிர்ப்பு சக்தி செல்கள். இவற்றில் எச்ஐவி கிருமிகள் பல்கிப் பெருகுவதால் நோய் தீவிரம் அடைகிறது. நம் உடலிலேயே இருக்கும் எஸ்ஏஎம்எச்டி1 எனப்படும் புரோட்டீன், எச்ஐவி கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். 

எச்ஐவிக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்சி நியூக்ளியோடைட் பொருளை எஸ்ஏஎம்எச்டி1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளோம். இதை மருந்தாக பயன்படுத்தினால், எச்ஐவி பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது. இவ்வாறு மிகேல் கூறினார்.

Wednesday, 14 December 2011

Transgenders gather to worship Lord Aravan

As Lord Aravan (Koothandavar) is ceremonially taken through Koovagam village upon a two-storey high, decorated wooden car during annual festival, transgenders (‘aravanis’) worship the deity after making offerings, singing and dancing in the streets.
in Our World, on the 20th of April 2011
As Lord Aravan (Koothandavar) is ceremonially taken through Koovagam village upon a two-storey high, decorated wooden car during annual festival, transgenders (‘aravanis’) worship the deity after making offerings, singing and dancing in the streets.
Sangithaamma, 28, delivers her rap, to the evident amusement of her sister transgenders and onlookers.
ID: 673005
  •  
  •  
  •