Monday, 19 December 2011


நிலத்தை எழுதித் தரக் கூறி அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கைது

 
Huge Selection of Decorative Paints, Visit official Site Now!
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
சென்னை: நிலத்தை எழுதித் தர மறுத்த அரவாணியை, அடித்து, உதைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.

சென்னை, பள்ளிக்கரணை பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அமுல்ராஜ் என்ற அமுதா (34) அரவாணியான இவர், ரியல் எஸ்டேட் புரோக்கர். கடந்த 24ம் தேதி கடைக்கு சென்ற அமுதா பின்னர் வீடு திரும்பவில்லை.

மறுநாள் அதே பகுதியில் காயங்களுடன் கிடந்த அமுதாவை மீட்ட அவரது தாய் பிலோமினா மேடவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அமுதாவை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்துள்ள அமுதாவிற்கு, தலையில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிந்து விசாரித்தார். அதில், அரவாணி அமுதாவை 5 பேர் கொண்ட கும்பல் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, அடித்து உதைத்தது தெரிந்தது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பிலோமினா, அப்பகுதியில் வாங்கிய நிலத்தை அபகரிக்க நினைத்த 5 பேர் கொண்ட கும்பல், அமுதாவை மிரட்டி உள்ளது. அதற்கு அமுதா மறுக்கவே, அவரை பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியுள்ளதாக பிலோமினா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஸ்டீபன் (24), சுரேஷ் (21), அசோக்குமார் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment