Saturday, 10 December 2011


பழநியில் திருநங்கைகள் "சடங்கு'
 
 
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2010,01:27 IST
பழநி : தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து குத்தாட்டத்துடன் திருநங்கைகள், பழநியில் சடங்கு நடத்தினர். மதுரை, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பள்ளப்பட்டி, அறந்தாங்கி, காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 1,000 திருநங்கைகள், பழநியில் திரண்டனர். பழநி அடிவாரம், வெண்ணிலா என்பவரின் மகள் சிந்து(21). இவருக்கு 40 நாட்களுக்கு முன், "ஆபரேஷன்' செய்யப்பட்டது. இந்த 40 நாட்களுக்கும் கூத்தாண்டவருக்கு விரதம் இருந்து, 41வது நாளான நேற்றிரவு சிந்துவுக்கு "சடங்கு' (பாலூற்றும் திருவிழா) நடந்தது. சடங்கு நடக்கும் முன், பாத விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் சீர் வரிசை புறப்பட்டது. கோவை மதனம்மாள், மகள் குமாரி தலைமையில் பழநி திருநங்கைகள் சங்கத் தலைவி பழக்கடை குமாரி இந்த சடங்கை நடத்தி வைத்தார். குத்தாட்டமும் நடந்தது.

No comments:

Post a Comment