பொன்னேரி : மர்மமான முறையில், இரண்டு திருநங்கைகள் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.பொன்னேரி அடுத்த, வேண்பாக்கம் பள்ளம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அங்கு அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த அம்ரூதின் என்கிற அனுசுயா, 19, மற்றும் மகேந்திரன் என்கிற மணிமேகலை, 24, ஆகிய இருவரும் உயிர் தோழிகளாக இருந்து வந்தனர்.அனுசுயாவிற்கும் மீஞ்சூர் அடுத்த, வழுதிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் மதன், 22. என்பவருக்கும் காதல் தொடர்பு இருந்து வந்தது. மதன் அடிக்கடி அனுசுயா வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.இம்மாதம், 10ம்தேதி மாலை மூடிக் கிடந்த அனுசுயாவின் வீட்டில் மதன் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மதனின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில்,நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் அடுத்த, காட்டுபள்ளி கிராமத்தில், சிந்தமாணிஸ்வரர் கோவில் அருகேயுள்ள மரத்தில் இரண்டு பேர் புடவை துணியில் தூக்கு போட்டு இறந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூக்கிட்டு இறந்து கிடந்த இருவரும் வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் வசித்து வந்த திருநங்கைகள் அனுசுயா மற்றும் மணிமேகலை என்பது தெரிய வந்தது. மர்மமான முறையில் இறந்து கிடந்த திருநங்கைகள் குறித்து போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.மதனின் மரணத்திற்கு பிறகு அனுசுயாவும், மணிமேகலையும் தினமும் குடித்துவிட்டு சோகத்துடனே இருந்ததாகவும், அதனால் அனுசுயா தற்கொலை செய்திருக்கலாம், உயிர்தோழியான மணிமேகலையும் உடன் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.மதனின் மரணம், அதைத் தொடர்ந்து, 20 நாட்களில் மணிமேகலை, அனுசுயா மரணம் என தொடர்வதால் திருநங்கைகளிடையே பெரும் பீதி நிலவுகிறது
No comments:
Post a Comment