Thursday, 8 December 2011


Transgenders
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
சேலம்: மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தங்களை, திருநங்கைகள் இனம் எனக் குறிப்பிட வேண்டும் என அரவாணிகள் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

தமிழக அரசு எங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கியுள்ளது. அதேபோல இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்க வேண்டும்.

தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் பாலினம் என்ற இடத்தில் ஆண் என்றே எங்களை குறிப்பிடுகிறார்கள். பாலினம் என்ற இடத்தில் திருநங்கை என்று குறிப்பிடலாம். இல்லையென்றால் பெண் என்று குறிப்பிடலாம். ஒரு சில இடங்களில் பெண் என்று குறிப்பிடுகிறார்கள்.

எங்களுக்கென்று நலவாரியமே அறிவித்துள்ள நிலையில், ஏன் ஆண் பெண் என்று மாறி மாறி குறிக்க வேண்டும். திருநங்கை என்று கணக்கிட்டால்தான், தமிழகத்தில் எங்களின் எண்ணிக்கை என்னவென்று தெரியும். எனவே எங்களின் கோரிக்கை பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment